Air Pollution in Delhi :மூச்சு முட்டும் காற்று மாசு ! டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

By Pothy RajFirst Published Nov 4, 2022, 12:29 PM IST
Highlights

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் நாளை முதல் மூடப்படுகிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் நாளை முதல் மூடப்படுகிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

டெல்லியில் பனிக்காலம் வந்துவிட்டாலே காற்று மாசும் சேர்ந்து விடுகிறது. ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் எரிக்கப்படும் குப்பைகள், வேளாண் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை டெல்லியை நோக்கி நகர்கிறது.

இதனால் ஏற்கெனவே பனி மூட்டத்தால் சிக்கியுள்ள டெல்லிவாசிகள், காற்று மாசும் சேரும்போது, மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். மூச்சுவிடுவதற்கே கடும் சிரமப்பட  வேண்டிய சூழலுக்கு டெல்லி மக்கள் தள்ளப்படுகிறார்கள். 

மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி

டெல்லியில் காற்று மாசின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக காற்றின் தரம் கவலைப்படக்கூடிய, தீவிரமான நிலைக்குச் சென்றுள்ளது. இப்படியே சென்றால், அடுத்ததாக ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும்.

 காற்று மாசின் குறியீடு 470க்கு மேல் இருப்பது மனிதர்களின் உடலுக்கு ஆபத்தானதாகும். அதிலும் நொய்டா, ஐஐடி, ஜஹாங்கிர்புரி, டெல்லி பல்கலைக்கழகம், குருகிராம் ஆகியவற்றில் காற்றின் மாசுக் குறியீடு 500க்கும் மேல் இன்று காலை இருந்தது. இந்த அளவு காற்று மாசு தீவிரத்துக்கும் அதிகமாகும். அதிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், சுவாசக் கோளாறு நோய் உள்ளவர்களுக்கு இந்த அளவுகாற்று மாசு உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். 

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் காற்று மாசைக் குறைக்கும் நடவடிக்கையில் காற்றுதர மேலாண்மை ஆணையம் இறங்கும் எனத் தெரிகிறது. அதாவது டீசல் வாகனங்கள், டிரக்குகளுக்கு அனுமதி மறுப்பது, சிஎன்ஜி, பேட்டரி கார்களுக்கு மட்டுமே அனுமதி, என்சிஆர் பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்

சுவாசிக்க முடியாத சூழல்! புகை சூழ் டெல்லி-என்சிஆர் மண்டலம்: என்ன காரணம்?

டெல்லியில் காற்று மாசு சரியாகும் வரை பள்ளிகளை மூட வேண்டும் என்று குழந்தைகள் நல உரிமை ஆணையம் டெல்லி அரசைக் கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை அதுதொடர்பாகப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது “ டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. காற்று மாசைக் குறைக்கும் வகையில் மீண்டும் ஒற்றை எண், இரட்டைஇலக்க எண் அடிப்படையில்கார்களை இயக்க முடிவு செய்யப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வழக்கும் போல் நடைபெறும், ஆனால், வெளிப்புற நடவடிக்கைகள் ஏதும் கிடையாது. 

எல்லைப் பாதுகாப்புக்காக 10 வான்வழி இலக்கு கருவிகள், 120 தற்கொலை ட்ரோன்களையும் வாங்கும் இந்திய ராணுவம்

டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்பப்ப ள்ளிகளும் நாளை முதல் மூடப்டுகின்றன. 5-ம் வகுப்புக்கு மேல்  பயிலும் மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள், பணிகள்,விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் கழிவுகள் எரிப்பதால் உருவாகும் புகைக்கும், காற்றின் தரம் குறைந்து, மாசு அதிகரித்தமைக்கும் முதல்வர் பகவந்த் மான் பொறுப்பேற்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்


 

click me!