உஷார்..! குழந்தைகளை தாக்கும் ஒமைக்ரான்..இந்தெந்த அறிகுறிகள் இருக்கும்.. பகீர் கிளப்பும் எய்மஸ் இயக்குனர்..

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 4:56 PM IST
Highlights

இந்தியாவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளின் தீவிரத்தைப் பற்றியும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று இரண்டரை லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 20,911 ஆக இருந்த நிலையில் நேற்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,548 அதிகரித்து 23,459 ஆக பதிவாகியுள்ளது. 1,50,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,459 ஆக உள்ளது. 

இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஒமைக்ரான் பாதிப்புகளாக இருக்கின்றன. ஒமைக்ரான் பாதிப்பு மிகவும் லேசான அறிகுறி இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஒமைக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் குழந்தைகள் இடையே தீவிரமான ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு வருவதாக எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு வேகமாக ஒமைக்ரான் பரவி வருகிறது. அதில் பலருக்கு தீவிர பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கலாம். ஒமைக்ரான் இயல்பிலே வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் குழந்தைகளிடம் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாமல் இறப்பது இதற்கு முதல் காரணம் என்றும் கொரோனா காரணமாக டெல்லியில் கடந்த ஜனவரி 9-12 வரை 7 குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள் என்றும் கூறினார். இவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களுக்கு நாள்பட்ட சில உடல் குறைபாடுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் இப்படி கொரோனா காரணமாக குழந்தைகள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது. குழந்தைகள் பலர் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சிடிசி தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிகுறிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.அதன்படி காய்ச்சல், வறண்ட தொண்டை, மூக்கு அடைப்பு, இருமல் ஆகியவை குழந்தைகள் இடையே ஏற்படும் சாதாரண ஓமிக்ரான் அறிகுறிகள் ஆகும். சில குழந்தைகளுக்கு தீவிர அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மூச்சு விடுவதில் சிரமம், முகம், உதடு, கைகள் நீல நிறத்தில் மாறுவது. இதயம் லேசாக வலிப்பது, குழப்பம் ஏற்படுவது, திரவ பொருட்களை அருந்த முடியாமல் தவிப்பது, உறக்கம் இன்றி தவிப்பது ஆகியவை மோசமான அறிகுறிகளாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

click me!