Coronavirus: ஐயயோ.. இந்தியாவில் கோர முகத்தை காட்டும் கொரோனா.. புதிய உச்சத்தை நோக்கி செல்லும் பாதிப்பு.!

By vinoth kumar  |  First Published Jan 15, 2022, 11:09 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43,211 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 46,406 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,68,50,962ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டம் ஆடியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Latest Videos

undefined

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்;- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43,211 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 46,406 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதேபோல டெல்லியில் தினசரி பாதிப்பு 28,867-ல் இருந்து 24,383 ஆக சரிந்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் புதிய பாதிப்பு 25,005-ல் இருந்து 28,723 ஆகவும், தமிழகத்தில் 20,911-ல் இருந்து 23,459 ஆகவும் உயர்ந்துள்ளது. கேரளாவில் 16,338, உத்தரபிரதேசத்தில் 15,975 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,22,684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி 14,17,820 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 199 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 402 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 58,02,976 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 156 கோடி டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

click me!