பாஜக வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்... இது காங்கிரஸின் தோல்வி: மம்தா பானர்ஜி காட்டம்

By SG BalanFirst Published Dec 4, 2023, 3:16 PM IST
Highlights

மூன்று மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியால், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் சலசலப்புகள் தொடங்கியுள்ள நிலையில் மம்தா பானர்ஜி காங்கிரஸை விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதித் பகிர்வுக்கு முன்வராததால் தான் மூன்று மாநிலங்களில் நடந்த முக்கிய சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார். இது "காங்கிரஸின் தோல்வி, மக்களுடையது அல்ல" என்றும் அவர் வலியுறுத்தினார்.

"காங்கிரஸ் தெலுங்கானாவை வென்றுள்ளது. அவர்கள் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் வெற்றி பெற்றிருக்கலாம். இந்தியா கூட்டணிக் கட்சிகளால் சில வாக்குகள் பிரிந்துவிட்டன. இதுதான் உண்மை. நாங்கள் தொகுதிப் பங்கீடு ஏற்பாட்டைச் சொன்னோம். வாக்குகள் பிரிந்ததால் தான் அவர்கள் தோற்றார்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில சட்டசபையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்: ராகவ் சத்தாவுக்கு அனுமதி; மஹுவா மொய்த்ரா ரிப்போர்ட்?

"சித்தாந்தத்துடன், ஒரு வியூகத்தையும் கொண்டிருக்க வேண்டும்" என்று கூறியவ அவர், "தொகுதிப் பங்கீடு இருந்தால், 2024 இல் பாஜக ஆட்சிக்கு வராது" என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இந்தச் சுற்றுச் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸும் பிற இந்தியா கூட்டணிக் கட்சிகளும் பல இடங்களில் தனித்துப் போட்டியிட்டன. இது, வாக்குகள் பிரிவதற்கு வழிவகுத்து, பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்று மாநிலத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியால், இந்தியா கூட்டணிக் கட்சிக்குள் சலசலப்புகள் தொடங்கியுள்ளன.

ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே. சி. தியாகி, "காங்கிரஸ் மற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணித்தது, தனித்து வெற்றிபெற முடியவில்லை" என்று விமர்சித்துள்ளார். இந்தி பெல்ட்டில் பாஜகவை எதிர்த்துப் போராடுவது அவசியம் என்று கேரள முதல்வரும் சிபிஎம் தலைவருமான பினராயி விஜயனும் கருத்து கூறியுள்ளார்.

இதை எப்படி சாப்பிடுறது? ஜோமேட்டோவில் ஆர்டர் செய்த ஹைதராபாத் பிரியாணியில் பல்லி!

click me!