ரன்வீர்சிங்குக்கும் உங்களுக்கும் காதலாமே? தீபிகா படுகோனே அளித்த பதில் உங்களுக்கு புரிகிறதா?

Asianet News Tamil  
Published : Nov 25, 2017, 07:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
ரன்வீர்சிங்குக்கும் உங்களுக்கும் காதலாமே?  தீபிகா படுகோனே அளித்த பதில் உங்களுக்கு புரிகிறதா?

சுருக்கம்

Deepika padukone Answer about her love with Ranveer singh

பத்மாவதி படத்தில், நடித்துள்ள ரன்வீர்சிங்குடன் காதலா? என்பது குறித்து கதாநாயாகி நடிகை தீபிகா படுகோேன மனந்திறந்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை தீபிகா படுகோனே அளித்த பேட்டியின்போது, பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங்கின் காதலில் விழுந்துவிட்டீர்களாமே? என நிருபர் கேட்டார்.

அதற்கு தீபிகா அளித்த பதிலில், “  ‘‘படத்தில் நடித்துள்ள ரன்வீர்சிங்கும் நானும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. சில உறவுகள் ஒரு புள்ளியில் இருந்து விரிவடையும். எங்கள் உறவும் அது போல் விரிவடைந்து இருப்பது உண்மைதான்.

நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது எதுவும் தேவை இல்லை. அந்த அளவுக்கு மனதுக்கு சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை ஏற்பட்டு உள்ளது.

ஆனால் எப்போது அது நடக்கும் என்று இப்போது சொல்ல தெரியவில்லை. ஏற்கனவே ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அதில் கசப்பான அனுபவங்களை சந்தித்தேன். அது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

அதில் இருந்து வெளியே வர ரொம்ப காலம் ஆனது. அந்த நெருக்கடியில் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆறுதலாக இருந்தார்கள். அதன்பிறகு நடிப்பின் மீதுதான் என் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!