‘இறைச்சி சாப்பிடுவது கொலைக்கு சமம், சைவத்துக்கு மாறுங்கள்’ - ‘பீட்டா’ அமைப்பு நூதன போராட்டம்

First Published Nov 25, 2017, 6:54 PM IST
Highlights
Beta set up a man in a village in Thiruvananthapuram.


இறைச்சி சாப்பிடுவது கொலைக்கு சமம், சைவத்துக்கு மாறுங்கள் என்ற வாசகத்தோடு,  மாதிரி அடுப்பில் மனிதரை படுக்க வைத்து பீட்டா அமைப்பு திருவனந்தபுரத்தில் நூதன பிரசாரம் செய்தது.

பீட்டா அமைப்பு,விலங்குகள் நலனுக்காகவும், விலங்குகள் சித்தரவதைக்கு எதிராகவும் போராடி வரும் தனிபட்ட அமைப்பாகும்.

நூதன பிரசாரம்

திருவனந்தபுரத்தில் உள்ள கணக்காகுன்னு அரண்மனை வாயில் அருகே நேற்றுமுன்தினம் பீட்டாஅமைப்பு வித்தியாசனமான முறையில் இறைச்சி  உண்பதை கைவிடக்கோரி பிரசாரம் செய்தது.

மனித மாமிசம்?

சாலையில், மாதிரி அடுப்பு வைத்து அதில் பெண் ஒருவருக்கு இறைச்சி நிறத்திலும், ரத்தம் வடியும் தோற்றத்திலும் உடை அணிவித்து படுக்க வைத்து இருந்தது. கிரில் சிக்கன் அடுப்பில் வெந்துவருவதைப் போல் அந்த பெண் படுத்து இருந்தார்.

அந்த அடுப்பின் கீழ் உள்ள ஒருபலகையில், ‘ இறைச்சி சாப்பிடுவது கொலைக்கு சமம், சைவத்துக்கு மாறுங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

சர்வதேச மாமிசமில்லாத நாள்

இது குறித்து பீட்டா அமைப்பின் பிரசாரகர் ஆயுஷி சர்மா கூறுகையில், “ நம்மில் யாருக்கும் மனிதமாமிசத்தை சுவைக்க ஒருபோதும் விரும்பமாட்டோம். அதனால்,தான் இறைச்சி சாப்பிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த போராட்டத்தை தொடங்கினோம். 25-ந்தேதி(நேற்று) சர்வதேச மாமிசமில்லாத நாளையொட்டி இந்த நூதன பிரசாரம் செய்யப்பட்டது.

உணவாக பார்க்காதீர்கள்

அனைத்து விலங்குகளும் எலும்பு, தசை, ரத்தம் ஆகியவற்றால் உருவஆனது என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறோம். அந்த பிராணிகளுக்கும் வலி, உணர்வுகள் எல்லாம் இருக்கிறது. வாழ்க்கை என்பது விலைமதிக்க முடியாதது, அந்த விலங்குகளை கொன்று, அதை உணவாக தட்டில் வைத்து பார்க்ககூடாது.

மனிதரை மாமிசம் போல் இங்கே நாங்கள் அமைத்தது, மக்கள் சைவத்துக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்திதான்.மக்கள் மனித மாமிசத்தை சாப்பிடுவார்களா?, பின்,ஏன் விலங்குகள் மீது மட்டும் மனிதன் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுகிறான்?’’ எனத் தெரிவித்தார்.

சைவத்துக்கு மாறுங்கள்

பீட்டா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ இறைச்சி சாப்பிடுவதால், மனிதர்களுக்கு நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், உடல்பருமன்ஆகிய உண்டாகின்றன. ஐ.நா. அறிக்கையின்படி, பருநிலை மாற்றத்தை தவிர்க்க அனைவரும் சைவத்துக்கு மாற வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!