மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு...!

Asianet News Tamil  
Published : Nov 25, 2017, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 305 ஆக உயர்வு...!

சுருக்கம்

The death toll has increased by 305.

சினாய் தீபகற்பத்தில் உள்ள மசூதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. 

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் அல் ராவ்தா என்ற மசூதி உள்ளது. இங்கு ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக கூடுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று பலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, மசூதி அருகே வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், மசூதிக்கு வெளியே இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் உடல் சிதறி 235 பேர் பரிதாபமாக பலியாகினர். 80 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. 

PREV
click me!

Recommended Stories

மறுபடியும் வங்கதேசத்தில் கொடூரம்! 50 வயசு இந்து பெரியவரை தாக்கி தீ வைத்த கொலைவெறி கும்பல்!
கருவறையிலும் கைவரிசை! சபரிமலை தங்கக்கொள்ளையில் அடுத்தடுத்த அதிர்ச்சி.. சென்னையில் முக்கியக் குற்றவாளிகள்!