நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - பெருகும் ஆதரவு...

Asianet News Tamil  
Published : May 05, 2017, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை - பெருகும் ஆதரவு...

சுருக்கம்

death sentence for accused in nirbhaya case

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தூக்குதண்டனை உறுதி செய்ததற்கு மகளிர் அமைப்பினர் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது.

இதையடுத்து அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 4 பேருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், முகேஷ், பவன், வினய்சர்மா, அக்ஷைதாகூர், ஆகியோரின் மரண தண்டனை உறுதி செய்யபடுவாதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், நீதிபதிகளின் இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள், மகளிர் அணியினர் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், தண்டனைகள் கடுமையாக்க பட்டால் தான் குற்றங்கள் குறையும் எனவும் நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கதக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

மகளிர் அணியின் கலைச்செல்வி என்பவர் கூறுகையில், நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்க்கதக்கது எனவும், ஆனால் இவ்வளவு நாட்கள் இழுத்தடித்து தீர்ப்பு வழங்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மனநல ஆலோசகர் ஷாலினி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பெற்றோர்கள் மனநிலையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!