இன்றோடு காலக்கெடு முடிகிறது.. 2000 ரூபாய் நோட்டை இனி மாற்ற முடியுமா? RBI என்ன சொல்கிறது? முழு விவரம்!

By Ansgar R  |  First Published Sep 30, 2023, 6:30 PM IST

Two Thousand Rupees Note : 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப கொடுக்க அல்லது மாற்ற இன்று (செப்டம்பர் 30ம் தேதி) தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, அக்டோபர் 1 முதல், 2,000 ரூபாய் நோட்டு அதன் மதிப்பை நிறுத்திசாதாரண காகிதமாக மாறும் என்று அவரிவித்தது.


2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு இது செய்தி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரே இரவில் அதிக மதிப்புள்ள 1,000 மற்றும் 500 நோட்டுகளை ரத்து செய்த பிறகு, கடந்த நவம்பர் 2016ல் RBI 2,000 நோட்டை அச்சிடத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலக்கெடுவுக்குப் பிறகு 2,000 கரன்சி நோட்டுக்கு என்ன நடக்கும்?

Tap to resize

Latest Videos

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, செப்டம்பர் 30 காலக்கெடுவுக்குப் பிறகும் 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமானதாக இருக்கும், இருப்பினும் அவை பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. இன்றுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியிடம் மட்டுமே நோட்டுகளை மாற்ற முடியும். எனவே, குறிப்பிட்ட வரம்பு ஏதுமின்றி 2,000 நோட்டுகளை அந்தந்த வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்வதற்கான இறுதி வாய்ப்பை இன்றைய நாள் குறிக்கிறது. 

சாலையோரத்தில் காய்கறி விற்க மாஸாக Audi காரில் வந்த இறங்கிய விவசாயி.. வைரல் வீடியோ

மக்கள் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் 20,000 வரை, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், வழக்கமான KYC தேவைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ டெபாசிட் விதிமுறைகள் இன்னும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

2000 ரூபாய் நோட்டுகளை இனி எப்படி மாற்றுவது?

ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) தனிநபர்கள் 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. அதுமட்டுமின்றி, அருகில் உள்ள எந்த வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இந்த நோட்டுகள் சட்டப்பூர்வமானவை என்பதால், கோரிக்கைச் சீட்டு அல்லது அடையாளச் சான்று தேவையில்லாமல் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். இருப்பினும், சில பொதுத்துறை வங்கிகள் வேறுபட்ட அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளன. எனவே, சுமூகமான பரிவர்த்தனையை உறுதி செய்வதற்காக, 2000 ரூபாய் நோட்டை மாற்றும் போது ஒரு அடையாளச் சான்று வைத்திருப்பது நல்லது.

சிறுமியை கொன்று சடலத்துடன் பாலியல் உறவு.. காமக்கொடூரர்கள் 3 பேர் கைது

click me!