சாலையோரத்தில் காய்கறி விற்க மாஸாக Audi காரில் வந்த இறங்கிய விவசாயி.. வைரல் வீடியோ

By Ramya s  |  First Published Sep 30, 2023, 2:47 PM IST

சந்தையில் காய்கறிகளை விற்கும் விவசாயி ஒருவர் ஆடிகாரில் மாஸாக இறங்கி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 


விலை உயர்ந்த ஆடம்பர் கார்களில் ஆடி (Audi) காரும் ஒன்று. பெரிய பெரிய பணக்காரர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் ஆடி காரில் செல்வதை பார்த்திருப்போம். ஆனால் சந்தையில் காய்கறிகளை விற்கும் விவசாயி ஒருவர் ஆடிகாரில் மாஸாக இறங்கி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த இளம் விவசாயி சுஜித், சாலையோர சந்தையில் காய்கறிகளை விற்க ஆடி ஏ4 சொகுசு காரில் வந்தது கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சுஜித் தனது ஆடி காரை சந்தைக்கு ஓட்டிச் செல்லும் போது, வயலில் பயிர்களை விளைவித்து, அவற்றை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிச் செல்வதை வீடியோவில் காணலாம். காய்கறிகளை விற்கும் முன் பிளாஸ்டிக் ஷீட் அமைத்து அதில் காய்கறிகளை அடுக்கி வைக்கிறார். அந்த பொருட்களை விற்றுவிட்டு அவர் தனது ஆடம்பரமான காரில் ஏறி புறப்பட்டு செல்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tap to resize

Latest Videos

A post shared by variety farmer (sujith) (@variety_farmer)

 

சுஜித் இந்த ஆடி காரை செகண்ட் ஹாண்டில் வாங்கியதாக கூறப்படுகிறது. இது 2.0-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 320 Nm மற்றும் 204 குதிரைத்திறன் கொண்டது. இந்த செடானின் பவர்டிரெய்ன் 7-ஸ்பீடு TC கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆடி A4 7.1 வினாடிகளுக்குள் 100 கிமீ/மணிக்கு வேகமடைகிறது. புதிய ஆடி கார் ரூ.44 லட்சம் முதல் ரூ.52 லட்சம் வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோல்ஸ் ராய்ஸ் மீது தீரா காதல் - சாமி தரிசனம் செய்ய 14 கோடி ரூபாய் கார் - மாஸாக வந்து இறங்கிய அனந்த் அம்பானி!

click me!