தரமற்ற, போலியான மருந்துகளைத் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!

By SG Balan  |  First Published Mar 28, 2023, 9:16 PM IST

இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் 18 மருந்து தயாரிப்பு நிறுனவங்களின் உரிமத்தை ரத்து செய்திருக்கிறது.


தரமற்ற மற்றும் போலியான மருந்துகளைத் தயாரித்து வந்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதாக இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் (20 மாநிலங்களில் உள்ள 76 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த மருந்து நிறுவனங்கள் போலியான அல்லது அசுத்தமான மருந்துகளை தயாரித்து வந்தன என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

தரமில்லாத மருந்துகளை பயன்பாட்டிலிருந்து ஒழிப்பதற்கான அரசின் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்கள் உரிமத்தை இழப்பதுடன் உற்பத்தியை உடனடியாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஆய்வு குழு நாடு முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் 15 நாட்கள் சோதனையில் ஈடுபட்டன.

Japan earthquake: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

உரிமம் ரத்து செய்யப்பட்ட 18 நிறுவனங்கள் தவிர, மேலும் 26 நிறுவனங்களுக்கு அவை தயாரிக்கும் மருந்துகளின் தரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 70 நிறுவனங்கள் மீதும், உத்தராகாண்ட் மாநிலத்தில் 45 நிறுவனங்கள் மீதும், மத்தியப் பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீதும் மருத்து தயாரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளிக்கான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் இறந்தாக தகவல் வெளியானதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில் தற்போது ஏமன் மற்றும் லெபனான் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளில் ஹைதராபாத்தைச் சேர்ந்த செலோன் லேப்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நான்கு மருந்துகள் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த எச்சரிக்கை கடிதம் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இந்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தில் விஷ பாக்டீரியா: WHO எச்சரிக்கை

click me!