வயிற்றின் மீதேறி நடனம்! தாயின் கொடூர சடங்கால் உயிரிழந்த பெண்!

Asianet News Tamil  
Published : Dec 22, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
வயிற்றின் மீதேறி நடனம்! தாயின் கொடூர சடங்கால் உயிரிழந்த பெண்!

சுருக்கம்

Dancing on the stomach! Mother cruel ritual! Dead girl!

சிறுமியின் வயிற்று வலியைக் குணப்படுத்த, வயிற்றின் மீது ஏறி நின்று தாய் பூஜை செய்தாதால், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. தாய் மற்றும் உறவுப் பெண் கைது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே விரார் நகரைச் சேர்ந்த சிறுமி சானியா (11) இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சானியாவுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலியால் துடிக்கும் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், தாய் மீனாட்சி அவருக்கு பூஜை ஒன்றை நடத்தியுள்ளார். இந்த பூஜையால், சானியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மீனாட்சி வீட்டில் இருந்து விசித்திரமான சத்தங்கள் கேட்டதாகவும், அவர் உடல் முழுவதும் மஞ்சளாக இருந்ததை அடுத்து அருகில் இருந்தோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், சிறுமி சானியாவின் தாய் மற்றும் அவரது உறவினர் ஆகியோரை விசாரித்தனர். மேலும், சிறுமியின் உடலில் பல பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் இந்த காயங்கள்தான் அவரின் இறப்புக்கு காரணம் என்று மருத்துவர்களும்
தெரிவித்திருந்தனர்.

இது குறித்து, உயிரிழந்த சானியாவின் சகோதரர் சஞ்சய், போலீசாரிடம் கூறும்போது, சானியா வயிற்று வலியால் அவதிப்படும்போது, அவர் குணமாவதற்காக, என்னுடைய தாய் சில சடங்குகளை செய்தார். ஆனாலும், என் சகோதரி இறந்து விட்டாள். மேலும் சடங்குகள் முடியும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று என் பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள் என்று கூறியுள்ளான்.

சானியா வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தாய் மற்றும் உறவினர், சிறுமியின் வயிற்றில் ஏறி நின்று நடனமாடியதாகவும், சிறுமியின் உயிரிழப்பு இதுவே காரணம் என்றும் போலீசார் கூறுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி மற்றும் அவரது உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!