
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் தகவல்.
கேரளாவில் 4 வகையான சமூகம் இருந்தாலும் தலித் மக்களுக்கான திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தலித் குடும்பத்தில் மாணவர்கள் படிக்க வசதியில்லை என்றால் அவர்களை அரசு படிக்க வைக்கிறது. கேரளாவில் தலித் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதன் மூலமாக தந்தை பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்த நிலையில் திருப்பதி கோயிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகரகள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி அனில் சிங்கல் கூறியுள்ளார். அர்ச்சகராக பிராமணர் அல்லாதோரை நியமிக்க பல வருடங்களாக முயற்சி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தற்போது அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துக் கொண்டு சம்மதம் அளித்துள்ளனர்.
இதையடுத்து திருப்தி தேவஸ்தானம் சுமார் 200 பேரை தேர்ந்தெடுத்து அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளித்தது. அவர்களில் பெரும்பாலோனோர் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள். அவர்கள் இப்போது பயிற்சி முடிந்து பணிபுரிய தயாராக உள்ளனர். விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அனில் சிங்கால் கூறினார்.