
தனது முன்னாள் காதலியுடன் பழகியதற்காக லவ் ஜிகாத் என்ற பெயரை சொல்லி வாலிபர் ஒருவரை கோடாரியால் வெட்டி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது பட்டா சேக் . இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் ரோட்டில் உள்ள ராஜ்நகரில் முகமது பட்டா சேக்கை ஷம்பூநாத் ரைகேர் என்பவர் கோடாரியால் வெட்டி கொலை செய்து மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்தார்.
அதை வீடியோவாக எடுத்து லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி பதிவையும் வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீடியோ குறித்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஷம்பூநாத்தின் முன்னாள் காதலியுடன் முகமது பட்டா பழகி வந்ததாக கூறப்படுகிறது.