ரேசன் கடையில் சமையல் சிலிண்டர்… மத்திய அரசின் ஆக்கப்பூர்வ திட்டம்!!

By manimegalai aFirst Published Oct 28, 2021, 11:09 AM IST
Highlights

சிறிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகளின் மூலம் சில்லறை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிடுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் மாற்றியமைக்கப்படுகிறது. சமீபகாலமாக சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வரை மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.700 ஆக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தில் ரூ.875.50 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.900 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.900-ஐயும் கடந்து செல்லும் நிலையில் உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர்ச்சியான விலை உயர்வு பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினர் இந்த விலை உயர்வால் செய்வதறியாது உள்ளனர். மக்கள் பசியோடு இருப்பதை தவிர்க்கவே ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு சமையல் பொருட்கள், அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் சமையல் சிலிண்டர்களையும் ரேசன் கடைகளில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் கருதினர்.

அதற்கேற்றார் போல் நேற்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரேசன் கடைகளில் சமையல் சிலிண்டர் வழக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்தார்.  கூட்டத்தில் பங்கேற்ற எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கியாஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டத்தை பாராட்டினர். இந்த கூட்டத்தில் பேசிய சுதான்ஷூ பாண்டே, ரேஷன் கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், ரேஷன் விலைக்கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, ரேஷன் விலைக்கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை மூலதனப் பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த கூட்டத்தை அதை தொடர்ந்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரேஷன் கடைகளின் நிதி நிலைமையை மேம்படுத்த அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக சிறிய அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை ரேஷன் கடைகளின் மூலம் சில்லறை விற்பனை செய்யும் திட்டம் கொண்டு வருவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆர்வம் காட்டும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு போதிய உதவிகள் வழங்கப்படும் எனவும் மூலதனப் பெருக்கத்திற்காக ரேஷன் கடை டீலர்களுக்கு முத்ரா கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

click me!