பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ‘தாதா சாகேப்’ ரஜினிகாந்த்… என்ன விஷயமாக இருக்கும்…?

Published : Oct 27, 2021, 06:43 PM IST
பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ‘தாதா சாகேப்’ ரஜினிகாந்த்… என்ன விஷயமாக இருக்கும்…?

சுருக்கம்

பிரதமர் மோடியை மனைவியுடன் சென்று நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்துள்ளார்.

டெல்லி: பிரதமர் மோடியை மனைவியுடன் சென்று நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்துள்ளார்.

திரையுலகில் மிகவும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருது சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் அவர் விருதை பெற்றுக் கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூக வலை தளங்களிலும் தாதா சாகேப் ரஜினிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந் நிலையில் விருது பெற்ற ரஜினிகாந்த் அதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மனைவியுடன் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்த 2 சந்திப்புகளின் போதும் அவரது மனைவியும் உடன் இருந்திருக்கிறார். இது தொடர்பான போட்டோக்களை ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி உள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று கூறி உள்ளார். போட்டோக்களையும், சந்திப்பையும் அறிந்த ரஜினி ரசிகர்கள் படு குஷியில் இருக்கின்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?