CWC: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு? காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இவரா?

Published : Mar 13, 2022, 03:23 PM IST
CWC: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முடிவு? காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இவரா?

சுருக்கம்

CWC:5 மாநிலத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று மாலை கூட இருக்கும் நிலையில் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

5 மாநிலத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று மாலை கூட இருக்கும் நிலையில் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தேர்தல் தோல்வி

உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்தது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பறிகொடுத்தது, உ.பியில் பிரியங்கா காந்தி 2019ம் ஆண்டிலிருந்து பிரச்சாரம் செய்தும் 2.40% வாக்குகள் மட்டுமேகிடைத்துள்ளது.

விமர்சனம்

காங்கிரஸ் கட்சிதேர்தலில் மோசமாகச் செயல்பட்டதால் கட்சியின்மூத்த தலைவர்கள் தொடர்ந்து சோனியா காந்தியின் குடும்பத்தாரையும், தலைமையையும் விமர்சித்து வருகிறார்கள். கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க கடந்த 2 ஆண்டுகளாகக் கூறியும் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தப்படுகிறது என்று விமர்சிக்கின்றனர்.

ராஜினாமா

இதையடுத்து, இன்று நடக்கும் காங்கிரஸ் காரியக்கமிட்டிக்கூட்டத்தில் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட சோனியா காந்தி தனது பதவியை ராஜினாமாசெய்யப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் ராஜினாமாசெய்யலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆனால், இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துவிட்டது என்றாலும், அனைவரின் கவனமும் காங்கிரஸ் காரியக் கமிட்டி மீது குவிந்துள்ளது.

சோனியா குடும்பம் முக்கியம்

காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில் “ சோனியா காந்தி குடும்பத்தார்இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்காது. காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தி வைத்திருப்பதே அவர்கள்தான். அவர்கள் இல்லாமல் கட்சி இயங்காது” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜி-23 தலைவர்களான ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் அடுத்த தலைவராக முகுல் வாஸ்னிக்கை நியமிக்கலாம் எனப் பரி்ந்துரை செய்துள்ளனர்.

புதிய தலைவர் 

ஜி-23 தலைவர்கள் தரப்பில் கூறியதாக வரும் தகவலின்படி, “கடந்த 2000ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தி வழிநடத்தியதுபோல், புதிதாக வரும் தலைவர் கட்சியை வழிநடத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள பெயரளவுக்குத்தான் தலைவராக சோனியாஉள்ளார்.கட்சியை வழிநடத்துவது என்பது திரையின்வழியாக, கே.சி.வேணுகோபால், அஜெய் மகான், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர்தான் நடத்துகிறார்கள்.

ராகுல் காந்தி தலைவர் இல்லை. ஆனால், அனைத்து முடிவுகளும் அவர் மூலம் தான் எடுக்கப்படுகிறது. எதையும் ராகுல் காந்தி வெளிப்படையாக பேச மறுக்கிறார். நாங்கள் கட்சியின் நலன் விரும்பிகள், எதிரிகள் அல்ல” எனத் தெரிவிக்கிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!