ஆவணம் இல்லாத ரூ.71 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல்

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
ஆவணம் இல்லாத ரூ.71 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல்

சுருக்கம்

கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71 லட்சத்துக்கான புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “ உடுப்பி அருகே  உள்ள பைலூர் நெடுஞ்சாலையில் கடந்த 1-ந் தேதி இரவு போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மங்களூரில் இருந்து குட்ரேமுக் நகரை நோக்கி வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர்.

அதில், ரூ. 71 லட்சத்துக்கு ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. இந்த ரூபாயை கொண்டு செல்வதற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, மங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் இந்த 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

காரில் வந்தவர்கள் பெயர் இம்ரான் ஹூசைன், ஆசிப் உமர் மற்றும் தீபக் ஷெட்டி என விசாரணையில் தெரியவந்தது'' எனத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?