பஞ்சாப்பில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 5:45 PM IST
Highlights

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப்பும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. மே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. 
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 7000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை 6771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதால், கொரோனாவை தடுத்து விரட்ட, ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடந்துவருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி நாளை, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதால் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களுமே ஊரடங்கை நீட்டிக்கும் மனநிலையில் தான் உள்ளன.

அதனால் நாளை பிரதமருடனான ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்கள் தெரிவிப்பார்கள். ஆனால் இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை ஏற்கனவே நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல் மாநிலமாக ஆலோசனை நடத்திய பஞ்சாப், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்துவந்தது. இந்நிலையில் மே ஒன்றாம் தேதி வரை பஞ்சாப்பில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

click me!