CUET PG 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு... மே 5 வரை விண்ணப்பிக்கலாம் என தகவல்!!

By Narendran S  |  First Published Apr 20, 2023, 6:50 PM IST

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 5 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 5 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 உணவு தெருக்கள்; மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Tap to resize

Latest Videos

தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்கலாம் என்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிக்க ஏப்ரல் 19 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் மே 5ஆம் தேதி இரவு 9.50 வரை cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 2002ம் ஆண்டு நரோதாகாம் கலவர வழக்கு... குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது அகமதாபாத் நீதிமன்றம்!!

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். 
  • அதில் CUET registration link என்பதை க்ளிக் செய்யவும். 
  • அங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும். 
  • பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 
  • விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு சமர்ப்பிக்கவும்.
click me!