தேசிய கீதத்தை பாடாத கிரிக்கெட் வீரர்... அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கொந்தளிப்பு…

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தேசிய கீதத்தை பாடாத கிரிக்கெட் வீரர்...  அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கொந்தளிப்பு…

சுருக்கம்

தனது அறிமுக ஜம்மு வீரர் பர்வேஷ் ரசூல் போட்டியிலேயே ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு ஆளாகியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையே 3 ஒருநாள் போட்டி மற்றும் 
3 டி-20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து டி 20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டி நேற்று கான்பூரில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப  20 ஓவரில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் மார்கன் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி, 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்கிலாந்து அணி டி 20 போட்டிகளில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அறிமுக வீரரான ஜம்முவைச் சேர்ந்த  பர்வேஷ் ரசூலின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

போட்டி தொடங்குமுன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சிரத்தையுடன் தேசிய கீதத்தைப் பாடிக் கொண்ருந்தனர், ஆனால் பர்வேஷ் ரசூல் தேசிய கீதத்தைப் பாடாமல் சுவிங்கம் மென்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் அவரை உடனடியாக அணியை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

வீடு கிடைக்காமல் அல்லாடும் ஜக்தீப் தன்கர்.. பதவி விலகி 6 மாசம் ஆகியும் கண்டுகொள்ளாத மத்திய அரசு!
சிவப்பு ரோடு... சூப்பரான ஐடியா! காட்டு விலங்குகளைக் காப்பாத்த ம.பி. அரசு செய்த மேஜிக்!