
நகர்புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் பசு, எருமை மாடுகள், நாய், பூனை,குதிரை, பன்றி போன்ற பிராணிகளுக்கு வரி விதிக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக வளர்ப்பு பிராணிகளுக்கு பஞ்சாப் அரசு தான் வரி விதிதத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் நவஜோத் சிங் சித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
பஞ்சாப் மாநிலங்களில் நகர்புறங்களில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளான பசு, எருமை மாடுகள், நாய், குதிரை, பன்றி ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படும். இதன்படி, நாய், பூனை, பன்றி, ஆடு, மான் ஆகியவற்றை வீட்டில் வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.250 வரியாகவும், எருமை , எருதுகள், பசு மாடுகள், ஒட்டகம், குதிரை, யானை போன்றவற்றை வளர்பவர்கள் ஆண்டுக்கு ரூ.500 வரியாகச் செலுத்த வேண்டும்.
வரி செலுத்தப்படும் ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படும். பிராணிகளின் கழுத்துப்பட்டையில் வரி செலுத்தப்பட்டதற்கான உரிமமும், மைக்ரே சிப்பும் பொருத்தப்படும். பிராணிகளுக்கான உரிமத்தை ஆண்டுதோறும் அதன் உரிமையாளர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.