CoWIN இணையதளம் தனிப்பட்ட நபரின் பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கவில்லை; மத்திய அரசு பதிலடி!!

By Asianet Tamil  |  First Published Jun 12, 2023, 4:00 PM IST

கோவிட்-19 தடுப்பூசி பதிவு இணையதளமான CoWIN தனிப்பட்ட நபரின் பிறந்த தேதி மற்றும் முகவரி உட்பட விவரங்கள் எதையும் சேகரிப்பதில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. 


CoWIN இணையதளத்தில் தனி நபர் உரிமை மீறல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் மத்திய அரசை கடுமையாக தாக்கி இருந்தார். இந்த நிலையில், தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் மொபைல் எண்கள், ஆதார் எண்கள், பாஸ்போர்ட் எண்கள், வாக்காளர் ஐடிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் கசிந்து இருப்பதாகவும், இவை இலவசமாக இணையத்தில் கிடைப்பதாகவும் செய்தி வெளியாகி இருந்தது. 

தனிநபர் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்கள் மற்றும் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்பட்ட தேதியை மட்டுமே இணையதளம் சேகரித்து இருந்தது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்கள் வெளியானதாக கூறப்பட்டது குறித்து விரிவான பரிசோதனையில் மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அமெரிக்கா.. விரக்தியில் ராகுல்காந்தி மற்றும் நண்பர்கள்..

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியது என்ன?
திரிணாமூல் காங்கிரஸின் (டிஎம்சி) சாகேத் கோகலே தனது டுவிட்டரில், ''ராஜ்யசபா எம்பியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான டெரெக் ஓ பிரையன், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பொது இணையத்தில் கிடைப்பதாக குறிப்பிட்டு இருந்தார். 

மேலும், ''சில பத்திரிக்கையாளர்களின் தகவல்களும் அதே இணையத்தில் கிடைப்பதாகவும், கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்ற ஒவ்வொரு இந்தியரின் தனிப்பட்ட விவரங்களும் கசிந்த இலவசமாகக் கிடைப்பதாக தெரிவித்து இருந்தார். 

பெண்களுக்கான ‘சக்தி’: அமலுக்கு வந்தது இலவச பேருந்து பயணம்!

இத்துடன், ''கடுமையான டேட்டா நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது, எவ்வாறு பாஸ்போர்ட், ஆதார் எண்கள் கசிந்து இருக்கக் கூடும். மத்திய அரசு பெரிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறதே என்று கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளனர். தகவல்கள் கசிவு குறித்து உள்துறை அமைச்சகம் உள்பட மோடி அரசுக்கு ஏன் தெரியவில்லை, இதுகுறித்து ஏன்  இந்தியர்களுக்கு தெரிவிக்கவில்லை? ஆதார் மற்றும் பாஸ்போர்ட் எண்கள் உள்ளிட்ட இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட தரவுகளை பெறுவதற்கு மோடி அரசாங்கத்தில் அனுமதி வழங்கியது யார்?  எது இந்த கசிவுக்கு வழிவகுத்தது?" என்று கோகலே கேள்வி எழுப்பி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செயல் தலைவர் சுப்ரியா சுலேயும், கசிவு உண்மையாக இருக்கும்பட்சத்தில் " வருந்தத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார். 

click me!