இந்தியாவை அலறவிடும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு.. உயிரிழப்பு 5000ஆக உயர்வு.!

By vinoth kumarFirst Published May 30, 2020, 11:54 AM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. 

 கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஆசியாவில் முதலிடத்தையும், உலகளவில் 9ம் இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. உயிரிழப்பில் சீனாவையும் முந்தியது.  நான்காம் கட்ட தேசிய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதில் இருந்தே இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.  

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799லிருந்து 1,73,763ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,706 ல் இருந்து 4,971ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,106 ல் இருந்து 82,370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 86,422 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 59,546 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 62,228 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2098 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் 20,246 பாதிப்புடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி 17,386 பாதிப்புடன் 3வது இடத்திலும், குஜராத் 15,934 பாதிப்புடன் 4வது இடத்திலும்உள்ளது. 

click me!