இந்திய தடுப்பூசிகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது... சர்வே மூலம் வெளியான மக்களின் மனநிலை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 19, 2021, 11:36 AM ISTUpdated : Feb 19, 2021, 11:37 AM IST
இந்திய தடுப்பூசிகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது... சர்வே மூலம் வெளியான மக்களின் மனநிலை...!

சுருக்கம்

10 ஆயிரத்திற்கும் குறைவான பாதகமான நிகழ்வுகளுடன் ஒரு கோடி அல்லது 10 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கான மைல்கல்லை இந்தியா நெருங்கி வருவதால், மக்களிடையே தடுப்பூசி குறித்த தயக்கத்தில் நேரடி தாக்கம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. 

கொரோனாவின் கோரதாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி கொடுக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்குமா? என்ற அச்சமும், அதனால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமா? என்ற தயக்கமும் மக்களின் தடுப்பூசி மீதான நம்பிக்கையை குறைத்தது. இந்நிலையில் லோக்கல் சர்க்கிள் என்ற நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வின் படி, இந்தியா குடிமக்களிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நிரூபணமாகியுள்ளது. 

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட உள்ளதால், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நாட்டு மக்களிடையே குறைந்து வருவதால், 50 சதவீத மக்கள் இப்போது அதனை போட்டுக்கொள்ள தயராக உள்ளனர். இதனால், தடுப்பூசி போட விரும்புவோரின் சதவீதம் ஒரு மாதத்திலேயே 38 முதல் 50 சதவீதம் வரை உயரும். அதேசமயம் தலைவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் 73 சதவீதம் வரை மக்களின் ஆதரவு உயரக்கூடும். அக்டோபர் 2020 முதல் லோக்கள் சர்க்கிள் நிறுவனம் இந்திய மக்கள் கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கான விருப்பத்தை அறிந்து கொள்வது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, 2021ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 69 சதவீதமாக இருந்த தயக்க அளவு, பிப்ரவரி 3ம் தேதி 58 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கணக்கெடுப்பின் போது பெரும்பாலானோர் பக்க விளைவுகளை பற்றி கவலைப்படுவதாகவும், செயல்திறன் பற்றி உறுதியாக தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். அதேசமயத்தில் 42 சதவீத இந்தியர்கள் தடுப்பூசி எடுக்க தயாராக உள்ளதாகவும், அரசியல் கட்சி தலைவர்கள் அதை எடுத்துக்கொண்டால் 65 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கணக்கெடுப்பின் போது முதல் கேள்வியாக, ‘இந்தியா முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உடன் சேர்த்து 1 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது, விரைவில் உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு தடுப்பூசி செலுத்த அணுகினால் உங்கள் விருப்பம் என்னவாக இருக்கும்?’ என்பதற்கு 42% மக்கள் அதை எடுத்துக்கொள்வோம் என பதிலளித்துள்ளனர். 21 சதவீத மக்கள் 3 மாதங்கள் வரை காத்திருப்பதாகவும், 7 சதவீத மக்கள் 3 -6 மாதங்கள் வரை காத்திருப்பதாகவும், 8 சதவீத மக்கள் 12 மாதங்கள வரை காத்திருந்து பின்னர் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே இதை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளதால், இந்திய மக்களிடம் கொரோனா தடுப்பூசி மீதான தயக்கம் 50 சதவீதம் வரை குறைத்துள்ளது உறுதியாகிறது. 

பிப்ரவரி 3ம் தேதி நடத்தப்பட்ட லோக்கல் சர்க்கிள் கடைசி கணக்கெடுப்பில் 58 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு தயங்குவது தெரியவந்தது. ஆனால் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களின் நம்பிக்கையால் இந்த வாரம் தயக்க அளவு 50 சதவீதமாக குறைத்துள்ளதை காண முடிகிறது. ஜனவரியின் தொடக்கத்தில் தடுப்பூசி எடுக்க தயங்கியோரின் எண்ணிக்கை 69 சதவீதமாக இருந்தது. இது தடுப்பூசி தொடங்கிய இரண்டாவது வாரத்தின் முடிவில் 62% ஆக குறைந்தது. தயக்க நிலை பின்னர் 2021 ஜனவரி மூன்றாம் வாரத்தில் 60% ஆக குறைந்து, பிப்ரவரி 2021 முதல் வாரத்தில் 58% ஆக குறைந்தது, இந்த வாரம் 50% ஆக உள்ளது. இதன் மூலம் குடிமக்களிடையே தடுப்பூசி தயக்கம் ஒரு மாத காலத்திற்குள் சுமார் 20% குறைந்துள்ளது என்பதை காட்டுகிறது. 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் அடுத்த டூர்! ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்!
120 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்! ரூ.2,500 கோடி ஒதுக்கிய மத்திய அரசு!