சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் குற்றம் என்ன தெரியுமா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 18, 2021, 07:19 PM IST
சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி.. நெஞ்சை உறைய வைக்கும் பகீர் குற்றம் என்ன தெரியுமா?

சுருக்கம்

தங்களுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உத்தரப்பிரதேச ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் சலீம், ஷப்னம் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் பவங்கேதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷப்னம் எம்.ஏ. பட்டதாரியான இவர், அம்மாவட்டத்தின் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ஷப்னத்திற்கும் அவருடைய வீட்டின் அருகேயுள்ள மர அறுக்கும் வேலை பார்த்து வந்த சலீமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு ஷப்னத்தின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தங்களுடைய காதலுக்கு தடையாக இருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்று விடலாம் என காதலன் சலீம் உடன் சேர்ந்து முடிவு செய்தார் ஷப்னம். அதன்படி குடும்பத்தினருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்துவிட்டு அவர்கள் அனைவரும் மயங்கி பின்னர், துளியும் ஈவு இரக்கம் இல்லாமல், ஷப்னமும் அவருடைய காதலன் சலீமும் கோடாரியால் கொடூரமாக வெட்டிக்கொன்றனர். இதில் ஷப்னத்தின் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், அவருடைய மனைவி மற்றும் 10 மாத கைக்குழந்தை உட்பட அனைவரையும் கொடூரமாக கொன்றுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தையே உலுக்கிய இந்த வழக்கில் ஷப்னம், சலீம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த கோர கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு அம்ரோஹா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2008ம் ஆண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.சலீம் ஆக்ரா சிறையிலும், ஷப்னம் ராம்பூர் சிறையிலும் அடைகப்பட்டுள்ளனர். 

தங்களுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உத்தரப்பிரதேச ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் சலீம், ஷப்னம் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஷப்னத்திற்கான மரண தண்டை நிறைவேற்றப்பட்டால், சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளி இவராகத் தான் இருப்பார். 
 

PREV
click me!

Recommended Stories

2026 விடுமுறை லிஸ்ட் ரெடி! 2026-ல் எந்த நாள் விடுமுறை? முழு பட்டியல் இதோ!
இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?