குழந்தைகளுக்கான தடுப்பூசி ரெடி..12 - 18 வயதினருக்கான தடுப்பூசி.. மத்திய அரசு அவசர அனுமதி..

By Thanalakshmi VFirst Published Dec 26, 2021, 6:25 AM IST
Highlights

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதினருக்கு செலுத்த மத்திய அரசின் டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதினருக்கு செலுத்த மத்திய அரசின் டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து 45 வயது முதல் 60 வயது வரை இருப்பவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த மே மாதம் முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த அனுமதி வழங்கியது மத்திய அரசு.கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கு பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்தியாவில் 2லிருந்து 8 வயது, 8லிருந்து 14 வயது மற்றும் 12லிருந்து 18 வயதினர் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனையானது டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. மிக விரிவான பரிசோதனைகளாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த பரிசோதனை நடைபெற்று வந்தது. மற்ற தடுப்பூசிகளைவிட கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களிடையே குறைந்த அளவே பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் நல்ல பலனை அளித்ததும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்தது.

தற்போது உலக முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதன்பின்பு பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போட விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தற்போது கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை தொடர்ந்து விரைவில் 12-18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தற்போது 12 முதல் 18 வயதினருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது.

இச்சூழலில் நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றி பிரதமர் மோடி, ஜனவரி 3 ஆம் தேதி முதக் 15 வயது முதல் 18 வயதுக்குள்ளோருக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எனறு அறிவித்தார்.

click me!