#Breaking:ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி- பிரதமர் அறிவிப்பு

By Thanalakshmi VFirst Published Dec 25, 2021, 10:15 PM IST
Highlights

இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
 

இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சையாக படுக்கை தயாராக உள்ளது. கடும் சவால்களுக்கு இடையே உலகில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பாதுகாப்பாக இந்தியா செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி திட்டம் விஞ்ஞான முறையில் நடத்தப்பட்டு வருவதாக கூறினார். மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க  அனைத்து வசதியும் செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 90 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

மேலும் மூக்கு வழியாக செலுத்தும் மருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் மேலும் பல் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்தார். மரபணு தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் உலகில் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பொருளாதரமும் சீரான பாதையில் திரும்பி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி 15 வயது முதல் 18 வயதுக்குள்ளோருக்கான கொரோனா தடுப்பூசி ஜனவரி 3 ஆம் தேதி முதல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

click me!