தெலங்கானாவில் சூனியம் வைத்த தம்பதியரை மரத்தில் கட்டி தொங்கவிட்ட கிராம மக்கள்

By Velmurugan s  |  First Published Jun 20, 2023, 12:50 PM IST

தெலங்கானா மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு எதிராக சூனியம் வைத்ததாகக் கூறி கணவன், மனைவியை கிராம மக்கள் மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லூர் கிராமத்தில், சூனியம் செய்ததாகக் கூறி, யாதயா மற்றும் ஷியாமளா தம்பதியை  கிராம மக்கள் கடுமையாக தாக்கி மரத்தில் கட்டி தொங்கவிட்டனர்.  ஒவ்வொரு சிறு பிரச்சனைக்கும் யாதயா அனைவரிடமும் சண்டை போட்டுக் கொள்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, சூனியம் செய்து மக்களை அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும். சில காலங்களுக்கு முன் உறவினர் குடும்பத்தினருடன் யாதயா சண்டையிட்டதாகவும், அந்த சண்டையின் போது சூனியம் செய்து அவர்களை அழித்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.  

சண்டை முடிந்த சில நாட்களில், அந்த குடும்பத்தில் மூத்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். யாதயா சூனியம் செய்ததாலே அவர் இறந்து விட்டதாக ஆத்திரமடைந்த மக்கள் யாதயா, ஷயாமளா இருவரையும் அடித்து, கட்டி மரத்தில் தொங்கவிட்டனர். தம்பதியர் மரத்தில்  தொங்கியதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். 

Tap to resize

Latest Videos

புதுவையில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து - 7 மாணவிகள் படுகாயம்

இந்த வீடியோ வைரலாகிய நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யாதயா மற்றும் ஷியாமளாவை மீட்டனர்.  பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல் துறையினர் கிராம மக்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Crime: தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் ஓட ஓட வெட்டி கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல்

யாதையா மற்றும் ஷியாமளா இருவரும் பட்டியிலனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறு செய்ததாக அச் சமூகத்தினரும் ஆதரவு தெரிவித்து உரிய நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!