கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு... அலறும் இந்தியா... மிரளும் மக்கள்..!

Published : Jun 04, 2020, 10:19 AM IST
கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு... அலறும் இந்தியா... மிரளும் மக்கள்..!

சுருக்கம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 நேரத்தில் 9,304 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,16 ,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,075 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9,304 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 260 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 74,860ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 32,329 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,587 பேர் உயிரிழந்துள்ளனர்.  25,872 பாதிப்புடன் தமிழகம் 2வது இடத்திலும்,  23,645 பாதிப்புடன் டெல்லி 3வது இடத்திலும், 18,100 பாதிப்புடன் குஜராத் 4வது இடத்திலும் உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்