மனைவியிடம் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க..கொரோனா முகாமிலிருந்து திரும்புவோருக்கு ஆணுறையுடன் அட்வைஸ்

By vinoth kumarFirst Published Jun 3, 2020, 12:33 PM IST
Highlights

உலகம் முழுவதுமான ஊரடங்கின் போது, அனைத்து தொழில்களும் துறைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆணுறை விற்பனை, பெண்கள் கர்ப்பம் தரித்தல் ஆகியவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின.

வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை பீகார் அரசு வழங்கி வருகிறது.

உலகம் முழுவதுமான ஊரடங்கின் போது, அனைத்து தொழில்களும் துறைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆணுறை விற்பனை, பெண்கள் கர்ப்பம் தரித்தல் ஆகியவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின. இந்நிலையில், ஊரடங்கால் சிக்கி பல்வேறு மாநிலங்களில் தவித்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், தற்போது தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிமுறையின்படி, இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள், சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.

வெளிமாநிலங்களில் தனிமையில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வீட்டிக்கு சென்று மனைவியை பார்த்ததும் பரவசத்தில்  பாசமழை பொழிந்து விட வாய்ப்புள்ளது. இதனால், தேவையற்ற கர்ப்பங்கள் அதிகரிக்கும் என பல்வேறு மாநில அரசுகள் அச்சப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பீகார் அரசு நூதனமான ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது வரை, தனிமை முகாம்களில் இருந்த 8.77 லட்சம் பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் பேர் மாவட்டம், மண்டல தனிமை முகாம்களில் இருந்து வருகின்றனர். வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, ‘வீட்டுக்கு போனதும் கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க...’ என்று அறிவுரை வழங்கி, எல்லாருக்கும் ஆணுறை பாக்கெட்டுகள் மற்றும்  கருத்தடை மாத்திரைகளை கொடுத்து அனுப்புகின்றனர். இதன் மூலம், அவர்களால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதை கணிசமாக தடுக்க முடியும் என்று கருதுகின்றனர். 

click me!