மகாராஷ்டிராவில் சும்மா ஜிவ்வுனு ஏறும் பாதிப்பு... கொரோனா 2 லட்சத்தை நெருங்குவதால் நிலைகுலைந்து போன இந்தியா..!

By vinoth kumarFirst Published Jun 2, 2020, 11:26 AM IST
Highlights

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  8,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  8,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அடக்கி வாசித்து வந்த நிலையில் தற்போது ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது.  பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்;- காலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 70,013 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,362ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 23,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை184ஆக உள்ளது.  20,834 பாதிப்புடன் 3வது இடத்தில் டெல்லியும், 17,200 பாதிப்புடன் 4வது இடத்தில் குஜராத்தும் உள்ளது. உலகளவில் பிரான்ஸ், ஜெர்மனியை முந்தி இந்தியா 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!