கொரோனா சிகிச்சை எடுத்துக்கொண்டவர் மருத்துவமனையில் குதித்து தற்கொலை..!

Published : Mar 19, 2020, 01:49 PM IST
கொரோனா  சிகிச்சை எடுத்துக்கொண்டவர் மருத்துவமனையில் குதித்து தற்கொலை..!

சுருக்கம்

சப்தர்ஜிங் மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து ஒரு இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் சோதனைக்குச் சென்ற ரத்த மாதிரி முடிவு வரும் வரை காத்திருக்க முடியாமல், டெல்லியில் ஒரு இளைஞர் மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியின் மையப் பகுதியில் ரிங்ரோடில் அமைந்துள்ள சப்தர்ஜிங் மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து ஒரு இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சோதனைக்குச் சென்றுள்ள தன்னுடைய ரத்த மாதிரி முடிவு வரும் வரை காத்திருக்காமல், பொறுமையின்றி அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து டெல்லி காவதுறையினர், ''கோவிட்-19 நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் 7-வது மாடியில் உள்ள சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தொடர்பான அவரது நிலை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவுக்காக மருத்துவர்கள் காத்திருந்தனர். இதற்கிடையில் நேற்று அவர் தங்கியிருந்த 7-வது மாடியின் சிகிச்சை பெற்றுவரும் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து வந்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டின் கதவுகளை உடைத்தார். 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்’’ என அவர்கள் தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!