வகுப்பறையில் மாணவர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட பள்ளி... நேரடி வகுப்புக்கு தடை!!

By Narendran S  |  First Published Apr 12, 2022, 3:01 PM IST

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி மூடப்பட்டதோடு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளி மூடப்பட்டதோடு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதுவரை முதல் அலை, 2 ஆம் அலை, 3 ஆம் அலை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில், தற்போது 4 ஆம் அலை ஜுலை மாதத்தில் வரலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3 ஆம் அலை முடிவுக்கு வந்த போதிலும், கொரொனா வைரஸ் முழுவதுமாக நீங்கவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, ஒமைக்ரான் என பல்வேறு வடிவங்களில் அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது உருமாற்றமடைந்து XE என்ற வடிவில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த பள்ளியில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் 3 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்தது. இதை அடுத்து நேற்று முதல் புதன் கிழமை வரை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்துள்ள பள்ளி நிர்வாகம், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

click me!