அதிகரிக்கும் கொரோனா... பள்ளியில் 16 பேருக்கு பாதிப்பு.. மீண்டும் ஆன்லைனில் பாடம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 12, 2022, 1:27 PM IST

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


நொய்டாவில் உள்ள காசியாபாத் பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நொய்டா பள்ளி ஒன்றில் மூன்று ஆசிரியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மூன்று நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு வார காலத்திற்கு ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு ஏற்படாமல் தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

தீவிர பரிசோதனை:

பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இருவர் ஒரே பள்ளியை சேர்ந்தவர்கள், இவர்களில் ஒருவர் நொய்டாவில் சதித்து வருகிறார் என காசியாபாத் மூத்த மருத்துவ அலுவலரான மருத்துவர் பவதோஷ் ஷன்க்தர் தெரிவித்தார். "இவர்களின் கொரோனா வைரஸ் சோதனை முடிவுகள் மாணவர்கள் அவர்களது வீட்டில் இருக்கும் போது வெளியானது. பள்ளிகளில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதை மேலும் தீவிரப்படுத்துகிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.  

மாணவர்களுக்கு  கொரோனா வைரஸ் XE தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்ற கேள்விக்கு, இதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை என மருத்துவர் தெரிவித்தார். 

ஆன்லைன் வழி கல்வி:

"பள்ளியை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிட்டு இருக்கிறோம். ஈஸ்டர் விடுமுறைக்காக பள்ளி தொடர்ந்து மூடப்பட்டு அடுத்த வாரம் திங்கள் கிழமை தான் திறக்கப்படும்," என இரண்டு மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட பள்ளியை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். நொய்டாவில் 13 பேர் பாதிக்கப்பட்ட பள்ளியில் தொடர்ந்து ஆன்லைன் வழி பாடம் நடத்த மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். 

"ஆன்லைன் வழி பாடம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். பள்ளியை முழுமையாக சுத்தப்படுத்த இருக்கிறோம். மாணவர்கள் ஏப்ரல் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு வர வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனையை கொண்டு வர வேண்டும்," என பள்ளி அதிகாரி தெரிவித்தார். 

click me!