கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம்..! தொற்று பரவல் தீவிரம்

Published : Jul 30, 2020, 08:17 PM IST
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம்..! தொற்று பரவல் தீவிரம்

சுருக்கம்

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 6128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,632ஆக அதிகரித்துள்ளது.  

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 6128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,632ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கிவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. ஆந்திராவிலும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.

 கர்நாடகாவில் தமிழ்நாடு, ஆந்திரா அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. ஆனாலும் கடந்த சில தினங்களாக தினமும் கர்நாடகாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில், முதல் முறையாக இன்று பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 1,18,632ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 3793 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 46694 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மேலும் 83 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 2230ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் தினமும் பதிவாகும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அம்மாநிலத்தில் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை காட்டுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

இடஒதுக்கீடு என்பது உரிமையே தவிர, விதிமுறைகளைத் தளர்த்தும் கருவியல்ல..! நீதிமன்றம் அதிரடி..
LPG விலைக்கு வேட்டு வைத்த Cow Dung Revolution! இனி சாணம் இருந்தால் போதும்.. சமையல் இலவசம்?