கர்நாடகாவை கதிகலங்கவிடும் கொரோனா..! இன்று உச்சபட்ச பாதிப்பு

Published : Jul 29, 2020, 10:01 PM IST
கர்நாடகாவை கதிகலங்கவிடும் கொரோனா..! இன்று உச்சபட்ச பாதிப்பு

சுருக்கம்

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 5536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,504ஆக அதிகரித்துள்ளது.  

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 5536 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,504ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. ஆந்திராவிலும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் உறுதியாகின்றன. இன்று ஒரே நாளில் ஆந்திராவில் 10093 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துவிட்டது.

 கர்நாடகாவில் தமிழ்நாடு, ஆந்திரா அளவுக்கு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. ஆனாலும் கடந்த சில தினங்களாக தினமும் கர்நாடகாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது. 

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5503 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கர்நாடகாவில் மொத்த பாதிப்பு 1,12,504ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இன்று மேலும் 1898 பேருக்கு தொற்று உறுதியானது. 

கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42901 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று மேலும் 92 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 2147ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடகாவில் மிக அதிகளவிலான பரிசோதனைகள் செய்யப்படாத போதிலும் பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து கொண்டிருப்பதால், இது கர்நாடகாவில் பரவல் அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களை போல அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!