India Corona: நாட்டில் இன்று ஒருவர் மட்டுமே பலி.. 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைவாக பதிவான உயிரிழப்பு..

By Thanalakshmi V  |  First Published Apr 14, 2022, 11:01 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
 


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 4,30,39,023 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து 818 பேர் குணமடைந்துள்ளனர். 

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா நோய் தொற்றில் இருந்து குண மடைந்தவர்களின் எண்ணிக்கை 4,25,06,228 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 11,058 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

கோவிட் காரணமாக ஒருவர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,737 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186.22 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,48,876 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைரும் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல் கோவிஷ்ல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் விலை பாதியளவு குறைந்து ரூ.225 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!