சற்று அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 3,205 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

Published : May 04, 2022, 10:16 AM IST
சற்று அதிகரித்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 3,205 பேருக்கு கொரோனா.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

சுருக்கம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,205 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,88,118 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,157 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 3,205 ஆக பதிவாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,44,689 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04 % ஆக உள்ளது.

தினசரி தொற்று பரவல் விகிதம் 0.71 % ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.63 % ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,23,920 ஆக உள்ளது. நாட்டில்  கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் விகிதம் 1 சதவீதமாக குறைந்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 189.48 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,79,208 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,27,327 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 83.89 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!