­­­­­­­­கொரோனா பாதிப்பில் இரட்டை சதத்தை நெருங்கும் மகாராஷ்டிரா, கேரளா.. மாநில வாரியாக முழு பட்டியல்

Published : Mar 28, 2020, 06:47 PM ISTUpdated : Mar 28, 2020, 06:55 PM IST
­­­­­­­­கொரோனா பாதிப்பில் இரட்டை சதத்தை நெருங்கும் மகாராஷ்டிரா, கேரளா.. மாநில வாரியாக முழு பட்டியல்

சுருக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் இரட்டை சதத்தை நெருங்கிவிட்டன. இந்த 2 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.   

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவர கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் சமூகத்தில் பரவவில்லை. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துவிட்டது. பலியானாரின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டில் தனிமைப்பட அறிவுறுத்தப்பட்டு அதிரடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சமூக தொற்று தடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் ஏற்கனவே டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் முடிவுகள் வர வர இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 900ஐ கடந்துவிட்ட நிலையில், மாநில வாரியாக பாதிப்பு குறித்து பார்ப்போம்.

மகாராஷ்டிரா - 177

கேரளா - 176

பஞ்சாப் - 38

தமிழ்நாடு - 41

டெல்லி - 40

கர்நாடகா - 74

ஜம்மு காஷ்மீர் - 18

லடாக்  - 13

ராஜஸ்தான் - 56

உத்தர பிரதேசம் - 51

தெலுங்கானா - 59

ஹரியானா - 21

ஆந்திரா - 14

குஜராத்  - 53

மேற்கு வங்கம் - 15

உத்தரகண்ட் - 5

ஒடிசா - 3

மத்திய பிரதேசம் - 30

சண்டிகர் - 8 

சத்தீஸ்கர் - 6

பீஹார் - 9

குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் - 75.
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!