இந்தியாவில் 900ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. கேரளா, மகாராஷ்டிராவில் உக்கிரம்

Published : Mar 28, 2020, 02:19 PM IST
இந்தியாவில் 900ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. கேரளா, மகாராஷ்டிராவில் உக்கிரம்

சுருக்கம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 900ஐ கடந்துவிட்டது.  

கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் நாளூக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவர கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் சமூகத்தில் பரவவில்லை. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துவிட்டது. பலியானாரின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டில் தனிமைப்பட அறிவுறுத்தப்பட்டு அதிரடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சமூக தொற்று தடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் ஏற்கனவே டெஸ்ட் செய்யப்பட்டவர்களின் முடிவுகள் வர வர இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 159ஆக உள்ளது. 

குஜராத்தில் 53 பேரும் ராஜஸ்தானில் 52 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 40ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு 20 பேர் பலியாகியுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!