ஒடிசா விபத்துக்குப் பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் இயக்கம்

By SG BalanFirst Published Jun 7, 2023, 9:13 AM IST
Highlights

275 பேர் உயிரிழந்த மிக மோசமான விபத்துக்குப் பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை அதன் சேவைகளை மீண்டும் தொடங்குகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை முதல் தனது சேவைகளை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது என்று ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஜூன் 2 அன்று பாலசோரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாதையில் எதிரே வந்த சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 1000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குஜராத்தில் ரூ.13,000 கோடியில் உருவாகும் டாடா மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலை

மின்னணு இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை கூறினார். எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்பது சிக்னல் அளிப்பதற்கு பயன்படும் அமைப்பாகும். இது சிக்னல்கள் முறையற்ற வரிசையில் மாற்றப்படுவதைத் தடுக்கிறது.

திங்களன்று, பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. ஹவுரா-பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாலசோரில் ரயில் விபத்து நடந்த பாதையைக் கடந்து சென்றது. விபத்து நடந்த பகுதி என்பதால், வந்தே பாரத் ரயில் உள்பட அனைத்து ரயில்களும் மெதுவாகவே இயக்கப்படுகின்றன.

பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!

ஒடிசா மூன்று ரயில் விபத்துக்குப் பிறகு 51 மணி நேரத்திற்குப் பிறகு, முதலில் சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டபோது, ரயில்வே ஊழியர்களும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பாதுகாப்பான பயணத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.

நாட்டையே உலுக்கிய பாலசோர் ரயில் விபத்து நடந்த சில நாட்களிலேயே ஒடிசா மாநிலத்தில் மற்றொரு ரயில் தடம் புரண்டது. திங்கட்கிழமை பர்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் பல பெட்டிகள் பர்கரில் தடம் புரண்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. யாரும் காயம் அடையவும் இல்லை.

சென்னை டூ திரிகோணமலை! இலங்கைக்கு இந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் இயக்கம்!

click me!