மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நவராத்திரி விழாவின் பொது மக்களுக்கு தொல்லைக்கொடுத்து வந்த இளைஞர்களுக்கு போலீஸார் நூதன தண்டனை கொடுத்த போலீஸாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நவராத்திரி விழாவின் பொது மக்களுக்கு தொல்லைக்கொடுத்து வந்த இளைஞர்களுக்கு போலீஸார் நூதன தண்டனை கொடுத்த போலீஸாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நவராத்திரி விழா நடைபெற்றது. அப்பகுதி போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் பக்தர்களுக்கு அருகில், காதுகளில் புங்கி அடித்துக் கொண்டு, பைக்கில் வேகமாக செல்வது போன்ற இளைஞர்கள் கூட்டம் காணப்பட்டது.
இதையும் படிங்க: ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிய ISRO.. ஒரே நேரத்தில் 6 டன் எடை கொண்ட 36 செயற்கைகொள்களை ஏவ தயாராகும் GSLV MK111..
இதை அடுத்து அவர்களை பிடித்த போலீஸார், உங்கள் வீட்டுப் பெண்களின் முன்னால் யாராவது வந்து காதுக்கு அருகில் உரத்த குரலில் பூங்கி விளையாடினால் எப்படி இருக்கும் என்று கண்டித்தனர். மேலும் அந்த இளைஞர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: திடீரென்று வந்த வெள்ளம்.. நடு ஆற்றில் சிக்கிய கார்.. மரத்தில் ஏறி தப்பித்த தம்பதியினர்.. திக் திக் நிமிடங்கள்.
இளைஞர்களின் இந்தச் செயலால் பொதுமக்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் போலீஸார் இளைஞர்களின் காதுகளில் புங்கி ஊதி தண்டித்தனர். மேலும் அந்த இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர். இவ்வாறு இளைஞர்களை போலீசார் வித்தியாசமாக தண்டிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.