அகிலேஷ் யாதவை சமாதானப்படுத்திய காங்கிரஸ்; டிச. 19இல் அடுத்த இந்தியா கூட்டணி கூட்டம்?

By SG BalanFirst Published Dec 10, 2023, 6:27 PM IST
Highlights

ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் தீர்த்துவிட்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் இந்த மாதம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கூட்டத்தின்போது வரவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

தலைவர்களின் வருகையைப் பொறுத்து டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடினமானதாக இருக்கும் கூறப்படுகிறது.

Latest Videos

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் கோட்டை விட்ட காங்கிரஸ், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கத் தவறிவிட்டது.

சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய்! பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு!

இந்நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் தீர்த்துவிட்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வந்ததும் அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் மீதான அதிருப்தியால் அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் அந்தக் கூட்டத்தைத் தவிர்க்கலாம் என்று தகவல் வெளியானதை அடுத்து கடந்த வாரம் நடக்கவிருந்த கூட்டம் தவிர்க்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவுடன் மத்தியப் பிரதேசத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக்கு இடமே அளிக்காமல் அனைத்து தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது. இதனால் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்தார்.

ஆம் ஆத்மி கட்சியும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடுக்கு முன்வரவில்லை என்பதால் தனது வேட்பாளர்களைத் தனித்துக் களமிறக்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் பிடிவாதமாக தொகுதிப் பங்கீட்டை நிராகரித்தது தான் மூன்று மாநிலங்களில் அக்கட்சி அடைந்துள்ள தோல்விக்குக் காரணம் என்று சாடினார்.

லிங்க் ஷேர் பண்ணும்போது உஷாரா இருங்க... 36,000 இணைய முகவரிகளை பிளாக் செய்த மத்திய அரசு!

click me!