காங்கிரஸ் நிலைமை இப்படியா ஆகணும்! மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது?

Published : Mar 12, 2022, 04:00 PM ISTUpdated : Mar 12, 2022, 04:01 PM IST
காங்கிரஸ் நிலைமை இப்படியா ஆகணும்! மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது?

சுருக்கம்

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்ததால், மாநிலங்களவையில் ஏறக்குறைய எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்ததால், மாநிலங்களவையில் ஏறக்குறைய எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் 

பஞ்சாப் மாநிலத்தில் பாதல் குடும்பத்தினர் கூண்டோடு தோல்வி அடைந்ததால், மாநிலங்களவையில் இனிமேல், அகாலிதளத்துக்கு ஒரு எம்பி.கூட இருக்காது. உ.பி. தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் வென்ற மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகும் இனிமேல் ஒரு எம்.பி. மட்டுமே இருப்பார். 

ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்அந்தஸ்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் ஆட்சியை இழந்ததாலும், உத்தரகாண்ட், கோவாவில் வெற்றி அருகே வந்து கோட்டைவிட்டதாலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது
உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள்தான் அனைத்தையும் மாற்றிவிட்டது.

5இடங்கள்

இந்த ஆண்டு மாநிலங்களவைக்கு பஞ்சாப் மாநிலத்திலிருந்து 5 இடங்கள் காலியாகின்றன. இந்த 5 இடங்களுக்கான தேர்தலும் ஏற்கெனவே அறிவி்கப்பட்டுள்ளன, வரும் ஜூலை மாதம் தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் 92 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் இந்த 5 எம்.பி.க்களும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

அகாலி தளம்

தற்போதுள்ள நிலையலி் காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் தலா 3 இடங்களும், பாஜகவுக்கு ஒரு இடமும் உள்ளன. 
அகாலிதளம் கட்சி எம்.பி. நரேஷ் குஜ்ரால் கூறுகையில் “ அகாலிதளம் கட்சிக்கு முதல்முறையாக மாநிலங்களவையில் ஒரு எம்.பி.கூட இல்லாத சூழலைச் சந்திக்கிறோம். ஆம் ஆத்மி கட்சி்க்கு வாழ்த்துகள், அவர்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றட்டும். இதுபோன்ற ஏகோபித்த முடிவுகளுக்கு மத்தியில், விரைவாகவே அதிருப்தியும் வந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

11 இடங்கள் காலி

உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு 31 எம்.பி.க்கள் செல்கிறார்கள். ஜூலை மாதம் 11 இடங்கள் காலியாகின்றன. அதன்படிபார்த்தால், மயாவதியின் நம்பிக்கைக்குரிய சதிஸ் மிஸ்ரா காலம் முடிகிறது. அவரின் நண்பர் அசோக் சித்தார்த், மிஸ்ராவின் பதவிக்காலமும் முடிகிறது. பகுஜன் சமாஜ் சார்பில் ஸ்ரீ ராம்ஜி மட்டும் இருப்பார்.

காங்கிரஸ் நிலை

மார்ச் 31ம் தேதி மாநிலங்களவைக்கான தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏற்கெனவே 3 இடங்களை இழந்துவிட்டது. அசாமிலிருந்து 2 இடங்கள், இமாச்சலப்பிரதேசத்திலிருந்து ஒருஇடத்தை இழந்துவிட்டது. ஆனந்த் சர்மா இமாச்சலப்பிரதேசத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மாநிலத் தேர்தல் முடிவுக்குப்பின், காங்கிரஸ் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.பஞ்சாப்பில் ஆட்சியை இழந்ததால், 3 எம்.பி.க்களையும், உத்தரகாண்டில் ஒரு இடத்தையும், உ.பியில் ஒரு இடத்தையும் காங்கிரஸ் கட்சி இழக்கிறது. 

உ.பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கபில் சிபல், பஞ்சாப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பிகா சோனி ஆகியோரின் பதவிக்காலமும் முடிகிறது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 8இடங்களை இழக்கிறது. 

எதிர்க்கட்சி அந்தஸ்து போகுமா

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் 34 உறுப்பினர்கள் உள்ளனர், அது 26ஆகக் குறையும். மாநிலங்களவை விதிப்படி, அவையில் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் எம்.பி.க்கள் வைத்திருக்கும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்க முடியும். அந்தவகையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருக்க 25 முதல் 26 இடங்கள் தேவை. காங்கிரஸ் கட்சி மாநிலங்களவைத் தேர்தலில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தோல்வி அடைந்தாலும் ஒரு உறுப்பினரை இழக்க நேரிடும், அல்லது யாரேனும் ஒரு உறுப்பினர் பதவி விலகினாலும் நிலைமை மோசம்தான்

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவரைத் தேர்தந்தெடுக்கும் தேர்தல் விரைவில் வர உள்ளது. இதில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் சேரந்து பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. குடியரசுத் தலைவர் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநிலங்களின் 4120 எம்எல்ஏக்கள் எலெக்ட்டோரல் கொலேஜ் முறையில் தேர்தலில் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். உ.பி. எம்எல்ஏக்களின் வாக்குமதிப்புதான் நாட்டிலேயே அதிகபட்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Republic Day 2026 : இந்த 5 உரிமைகள் தெரிஞ்சா யாரும் உங்களை ஏமாத்த முடியாது
இந்தியா குடியரசாக மாற 2 வருடம் ஏன் எடுத்தது? குடியரசு தினத்தின் உண்மை கதை