உண்மையை திசைதிருப்பும் முயற்சி… ஷாருக்கான் மகனுக்கு முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ்..!

By manimegalai aFirst Published Oct 4, 2021, 10:08 AM IST
Highlights

குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும் மவுனம் காக்கின்றனர்.

குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும் மவுனம் காக்கின்றனர்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதாக பாலிவுட் கிங்காங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தினமும் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஆர்யன் கான் கைதுக்கு ஆதரவாகவு, எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டது உண்மையை திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை தடுப்பு பிரிவின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின்  செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது சந்தேகம் கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தி நடிகரின் மகன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவினர் திடீரென வந்து கப்பலில் போதை பொருளை பறிமுதல் செய்ததாக கூறுகின்றனர்.  அவர்கள் உண்மையான பிரச்சினையை திசை திருப்புகின்றனர். உண்மை பிரச்சினை முந்த்ரா துறைமுக போதை பொருள் ஆகும். அந்த போதை பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஊடகத்தினர் ஒளிப்பரப்புவார்கள் என போதை தடுப்பு பிரிவு இங்கும், அங்கும் சிலரை பிடிக்கின்றனர். நீங்கள் முந்த்ரா துறைமுகம் பற்றி எழுதுங்கள். முந்த்ராவில் அதிகளவில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அமைதி காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!