ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.114….. அதிர்ந்து, மிரண்ட வாகன ஓட்டிகள்

By manimegalai aFirst Published Oct 4, 2021, 6:57 AM IST
Highlights

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 114 ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 114 ரூபாய்க்கு விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. குறிப்பாக பல மாநிலங்களில் பெட்ரோல் சதத்தை கடந்த சக்கை போடு போடுகிறது.

தொடர்ந்த விலை ஏற்றம் என்பதால் வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர். இந் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள கங்காநகரில் தான் இருப்பதிலேயே உச்சபட்ச விலை காணப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 114 ரூபாய் 31 காசுகளாக இருக்கிறது. ஜெய்ப்பூர், ஜெய்சல்மோர், ஜூன்ஜூன,பாலி என பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயை கடந்து உள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து விலையேற்றத்தில் இருப்பது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது.

டீசல் விலையும் ஒரு லிட்டர் 100 ரூபாயை கடந்து தான் விற்பனையாகிறது. கங்காநகரில் ஒரு லிட்டர் 103 ரூபாய் 87 காசுகளாக டீசல் விலை உள்ளது. ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, துங்ராபூர் உள்ளிட்ட பல  நகரங்களிலும் டீசல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாகவே உள்ளது. தொடரும் விலை ஏற்றத்தால் ராஜஸ்தானில் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

click me!