மம்தா வெல்வாரா….? தொடங்கியது பவானிபூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 8:52 AM IST
Highlights

மம்தா பானர்ஜி களம் இறங்கியுள்ள பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி உள்ளது.

பவானிபூர்: மம்தா பானர்ஜி களம் இறங்கியுள்ள பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி உள்ளது.

அண்மையில் முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். ஆனாலும் அவர் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதால் அவருக்காக பவானிபூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதியில் மம்தா பானர்ஜி களம் இறங்கினார்.

பவானிபூர் தொகுதியுடன் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ஜங்கிபூர், ஷாம்கர்கன்ச் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந் நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் அறிவிக்கப்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 3 அடுக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் வண்ணம் இருக்க கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

click me!