விவசாயிகள் மீது தடியடி நடத்தினால் தலைவர் ஆகிடலாம்…. முதலமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கு குவியும் கண்டனம்.!

By manimegalai aFirst Published Oct 4, 2021, 7:42 AM IST
Highlights

கைகளில் கட்டைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.. விவசாயிகள் நமக்கு செய்ததற்கு பழிவாங்க அவர்கள் மீது தடியடி நடத்துங்கள். ஒரு வருடன் சிறையில் இருந்தால் தலைவர் ஆகிவிடலாம்.

கைகளில் கட்டைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.. விவசாயிகள் நமக்கு செய்ததற்கு பழிவாங்க அவர்கள் மீது தடியடி நடத்துங்கள். ஒரு வருடன் சிறையில் இருந்தால் தலைவர் ஆகிவிடலாம்.

 

விவசாயிகள் போராட்டத்தை பாஜக எதிர்கொள்ளும் விதம் நாளுக்கு நாள் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். அதனை வலியுறுத்தியும், நெல் கொள்முதலை தாமதப் படுத்தியதை கண்டித்தும் அரியானாவில் இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, போராடும் விவசாயிகளை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியது.

இந்தநிலையில், அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசிய வீடியோ வெளியாகி அனைத்து தரப்பையும் கொந்தளிப்படையச் செய்துள்ளது. அந்த வீடியோவில் பேசும் முதலமைச்சர் கட்டார் பாஜக-வினர் ஆயிரம் தண்ணார்வலர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். கைகளில் கட்டைகளை எடுத்துக்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு பாடம்புகட்ட அவர்களை பழிவாங்குங்கள். இதற்காக நீங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் சிறையில் இருக்க நேரிடும். ஆனால் சிறைக்குச் சென்றால் நீங்கள் மிகப்பெரிய தலைவர் ஆகிவிடலாம்.

அரியானா முதலமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கட்டார் பேச்சுக்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் விவசாயிகளை தாக்க வேண்டும் என்ற ரீதியில் முதலமைச்சர் பேசவில்லை என அரியானா அரசு விளக்கம் அளித்துள்ளது.

click me!