நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி.
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி.
நாகாலாந்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை வாக்கு எண்ணிக்கையில் இருந்து பாஜக என்டிபிபி கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
undefined
மேகாலயாவில் தொங்கு சட்டசபையா? கான்ராட் சங்மா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?
செய்தி சேனல்கள் வெளியிட்டதகவலின்படி, பாஜக, என்டிபிபி கூட்டணி 36 இடங்களில முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்கவைக்கிறது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 31 இடங்கள் இருந்தாலே போதுமானது. ஆனால் பாஜக என்டிபிபி கூட்டணி 36 இடங்களுடன் நகர்ந்து வருகின்றன
இந்த கூட்டணியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) 20 இடங்களில் வென்றுள்ளது, பாஜக 11 இடங்களில் வென்றுள்ளதாகவும், பாஜக ஒரு இடத்திலும், என்டிபிபி கட்சி 5 இடங்களில் முன்னிலையுடன் செல்வதாகவும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சி 4 இடங்களில் வென்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வென்றுள்ளது.அத்வாலேயின் இந்திய குடியரசுக் கட்சி 2 இடங்களில் வென்றுள்ளது.
மகாராஷ்டிரா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ரவிந்திர தாங்கேகர் வெற்றி: பாஜகவுக்கு பின்னடைவு
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு இடத்தில் வென்று, மற்றொரு இடத்தில் முன்னணியில் உள்ளது. சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றுள்ளன.
ஆனால், நாகாலாந்தை ஆண்ட கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. காலை வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு இடத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதையும் பறிகொடுத்தது.
நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது. இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாமல் இப்போது மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளது.